Monday, 24 July 2017

இந்தியாவில் ஹைபர் லூப் - 2021

இந்தியாவில் ஹைபர் லூப் எனும் நவீன தொழில்நுட்பம் 2021 ல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹைபர் லூப் மூலம் 81 நிமிடங்களில் மும்பையிலிருந்து டில்லிக்கும், 95 நிமிடங்களில் சென்னையிலிருந்து கொல்கொத்தாவிற்கும், 21 நிமிடங்களில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் பயணம் செய்ய முடியும்.

இதன் அதிகபட்ச வேகம்  மணிக்கு 1200 கி.மீ என கணக்கிடப்பட்டுள்ளது.




















Saturday, 19 April 2014

நயன் தாராவிற்கும் மேக்னா ராஜிற்கும்

தமிழ் திரையுலகில் பிரபலமான இரு நடிகைகளுக்கிடையே ஆன ஒற்றுமை. நயன் தாராவிற்கும் மேக்னா ராஜிற்கும் போட்டோவில் காட்டப்பட்டுள்ளது.




Wednesday, 26 March 2014

பீனிக்ஸ் பறவை – ஒரு தமிழ் சொல்

பீனிக்ஸ் பறவை கிரேக்க காவியத்தில் சொல்லப்பட்ட ஒரு இளஞ்சிவப்பு நிற கற்பனை பறவை. இப்பறவை எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் என்று நம்பப்படுகிறது. வணிகர்கள் எனும் சொல் பணிகர்கள் என்று வங்காளத்தில் மருவியுள்ளது. அதேபோல் வங்காளம் என்பதும் பங்காளம் என்று மருவியுள்ளது. வற்றிலை என்பது பெட்ட்ல் என்று வங்காளத்தில் மருவியுள்ளது.


தமிழில் “வ” என்பது “ப” என்று வங்காளத்தில் மருவுகிறது. தமிழ் நாட்டிலிருந்து வங்காளம் சென்று குடியேறியவர்களால் மருவிய தமிழ் ங்காளத்தில் நடைமுறையானது. அங்கிருந்து வணிகம் செய்ய புறப்பட்ட வணிகர்கள் ஸ்பெயினை அடைந்தனர். அவர்களை பொனீசியர்கள் என்று அழைத்தனர். இதானால் இஸ் பொனீசியா என்று ஸ்பெயின் அக்காலத்தில் அழைக்கப்பட்டது. ஆகையினால் ஸ்பெயின் எனும் பெயரும் தமிழ் மற்றும் தமிழர்களால் உருவானதுதான்,


பொனீசியர்கள் காலில் பூசப்படும் மருதானி போன்ற சிவப்பு நிறத்தை தரும் ஒருவித குழம்பை விற்பனைக்காக எடுத்து சென்றனர். அக்குழம்பின் பெயர் செவ்வஞ்சி குழம்பு. அது பிற்காலத்தில் பொனீசிய திரவம் என்றும் அதன் நிறம் பொனீசிய நிறம் என்றும் மருவியது, பின்னாளில் உருவான கிரேக்க காவியத்தில் கூறப்பட்ட கற்பனை பறவையின் நிறம் பொனீசிய நிறத்தில் இருக்கும் என்று கூறி அப்பறவையை பொனீசிய பறவை என்று அழைத்தனர்.

அது பிற்காலத்தில் மருவி பீனிக்ஸ் என்றானது.



படியுங்கள் !!!  பகிருங்கள் !!!

Monday, 24 March 2014

டிராகன் - அனிமேஷன்

டிராகன் - அனிமேஷன் - பொழுது போக்கிற்கு என உருவாக்கப்பட்ட டிராகன்


70 வருடங்களுக்கு முன்னால் திருச்சி

திருச்சி - 70 வருடங்களுக்கு முன்னால்  Trichynopoly என்று அழைக்கப்பட்ட இன்றைய திருச்சியின் கானொளி.


Sunday, 16 February 2014

கொட்டாவியோ!!! கெட்ட ஆவியோ!!!


மனிதர்களுக்கு கொட்டாவியோ அல்லது கெட்ட ஆவியோ வருவது ஏனென்றால் மூளைக்கு தேவையான அளவு இளைப்பாருதல் இல்லாமல் சோர்வடையும் போது அதிக அளவு ஆக்சிஜனை எடுத்து கொள்வதற்கு வருகிறது. 

எனவே நுரையீரலை சுருக்கி விரிவடையச் செய்து கார்ப்ன்-டை-ஆக்சிடை வெளியேற்றுகிறது. இதை நம் முன்னோர்கள் நமது உடலில் இருந்து வெளியேறும் தேவையற்ற வாயு (கெட்ட ஆவி) என்று கருதினர்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் கொட்டாவி விடும்பொழுது அருகில் யாரேனும் இருந்தால் அவர் முகத்திற்கோ அல்லது மூக்கிற்கோ நேராக விட்டு அவர்களை இன்னல் படுத்தாதீர்கள்.