Tuesday 17 September 2013

போடா பொறம்போக்கு !!!

போடா பொறம்போக்கு !!! - திட்டலங்க,.. ஒரு சிறு தகவல் !!!

தமிழ்ல பொறம்போக்குன்னு சொன்னா ஒண்ணுத்துக்கும்  உதவாதவன் என்று  சொல்லுவாங்க, பல நேரங்களில் எதுக்கும் பயன்படாமல் பட்டா சிட்டா இல்லாத நிலத்தையும் பொறம்போக்குன்னு சொல்றோம் - இது மீட்டரு;

இனி மேட்டரு - வெள்ளக்காரன் இந்தியாவை ஆட்சி செய்தபோது போம்ரோக்குன்ற ஒரு அதிகாரி இருந்தார். அவருடைய வேலை இந்தியாவில் வெறும் நிலமாய் கிடப்பதையெல்லம் ஆங்கிலேய அரசின் வசப்படுத்துறது. அவர் பட்டிதொட்டியெல்லாம் அலைந்து திரிந்து கண்ணில்பட்ட எல்லா வெறும் நிலத்தையும் ஆங்கில அரசின் வசப்படுத்தினார். 

இது நாடெங்கும் பரவியது. பின்னாளில் ஏதாவது கேட்பாரற்ற வெறும் நிலத்தை பார்த்தால் அது போம்ரோக்கின் நிலம் என்று சொல்ல ஆரம்பிச்சாங்க. அது பின்னாளில் மருவி பொறம்போக்கு என்றாயிற்று.

    


No comments:

Post a Comment